உலகநாயகனுக்கு வைரமுத்து வாழ்த்து.

பரமக்குடியின்

அருமைக் கலைஞன்

பிறப்பு சிவப்பு;

இருப்பு கறுப்பு.

மரபுகடந்த புதுக்கவிதை

புரிதல் கடிது;

புரிந்தால் இனிது.

ஆண்டுகள் அறுபது

காய்த்த பின்னும்

நனிகனி குலுங்கும் தனிவிருட்சம்.

கலைத்தாய் தன் நெற்றியில்

மாற்றி மாற்றிச் சூடுவது

திலகத்தையும் இவர் பெயரையும்

‘கலையாக் கலையே கமல்’

கமல்ஹாசன்வைரமுத்து