(பழையபடம்)
சமீபத்தில்,குஷ்பு,ரேஷ்மா ரத்தோர்,ராதாரவி பாஜகவில்,இணைந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்,நடிகரும் நடிகரும், தயாரிப்பாளரும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் நடிகர் விஷாலை அணுகி, திமுகவில் இணையவேண்டும் என கோரிக்கை விடுத்ததாகவும் அதை விஷால் ஏற்று கொண்டதாகவும் கூறப்படுகிறது.
அப்படி நடிகர் விஷால் திமுகவில் இணையும் பட்சத்தில் அவருக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு கொடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே திமுக தலைவராக தேர்வு செய்யப்பட்ட மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் விஷால் , தனது டுவிட்டரில், திமுக மரபு வழியில் வந்த சரியான அரசியல் வாரிசு மு.க.ஸ்டாலின் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது