நடிகர் விஷால் திமுகவில் இணைகிறார்?
(பழையபடம்)
வருகிற 2021 தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சியினர் கூட்டணி பேச்சுவார்த்தை, தேர்தல் அறிக்கை தயாரிப்பு என பரபரப்பாக இயங்கி வருகின்றனர். மத்தியில் ஆளும் பாஜக,அதிமுக போன்ற கட்சிகள் தங்களது கட்சிக்கு பிரசாரத்துக்கு உதவும் வகையில் நடிகர், நடிகைகளை சேர்த்து வருகின்றனர்.
சமீபத்தில்,குஷ்பு,ரேஷ்மா ரத்தோர்,ராதாரவி பாஜகவில்,இணைந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்,நடிகரும் நடிகரும், தயாரிப்பாளரும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் நடிகர் விஷாலை அணுகி, திமுகவில் இணையவேண்டும் என கோரிக்கை விடுத்ததாகவும் அதை விஷால் ஏற்று கொண்டதாகவும் கூறப்படுகிறது.
அப்படி நடிகர் விஷால் திமுகவில் இணையும் பட்சத்தில் அவருக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு கொடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே திமுக தலைவராக தேர்வு செய்யப்பட்ட மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் விஷால் , தனது டுவிட்டரில், திமுக மரபு வழியில் வந்த சரியான அரசியல் வாரிசு மு.க.ஸ்டாலின் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது