“ஷ்ஷ் ….! சொல்லாதே வெளியில்!” மாஸ்டர் பாக்ஸ் ஆபீஸ் பிரேக் -அப் விவரம். சாதனையோ சாதனை!

16 நாட்கள் மட்டுமே தியேட்டர்களில் ஓடிய ‘மாஸ்டர் ‘திரைப்படம் இன்னும் இரண்டு நாட்களில் ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கிறது.

விஜய்யின் படம் குறைந்த நாட்களே தியேட்டர்களில் ஓடினாலும் வசூலில் சக்கரவர்த்திதான்.!

வாங்கிய யாருக்குமே நாட்டம் இல்லை.லாபம்தான்.!

எவ்வளவு லாபம் என்பதை பார்க்கலாம்.!

இந்தியா : 185 கோடி ( மொத்த வசூல்.)

உலகம் முழுவதும் : 228 கோடி ( மொத்த வசூல்.) 

விவரம்.:

  • தமிழ்நாடு  70 கோடி ( விற்ற விலை. 62. 50 கோடி.)
  • ஆந்திரா ,தெலங்கானா 14.4 கோடி  ( வி.விலை 8.50 )
  • கர்நாடகா 7.30 கோடி. ( வி.விலை 5 கோடி.)
  • கேரளா 5.40 கோடி. ( வி.விலை 4.50 கோடி.)
  • வட இந்தியா 2.50 கோடி. ( வசூல் திருப்தியில்லை.)
  • இந்தியாவில் டிஸ்ட்ரிபியூட்டர் பங்கு : 99.60 கோடி 
  • உலக அளவில் டிஸ்ட்ரிபியூட்டர் பங்கு : 118.35 கோடி.( முதலீடு 96 கோடி.) 

 

மாஸ்டர் பட வசூல் விவரம்.