மறைந்த நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நினைவு நாளையொட்டி(ஜூலை 21) இவ்வாண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் 108 பெண்களுக்கு தாலிக்கு அரை சவரன் தங்கம் வழங்கும் திட்டம் அன்னை இல்லம் சார்பில் தொடங்கப்பட உள்ளது என்று அவரது மூத்தமகன் ராம்குமார் கூறியுள்ளார்.
.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
‘பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து நடிகர்திலகம் ஆசியுடனும் இறை அருளுடன் பாரதிய ஜனதா மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு மேற்கொண்ட தேர்தல் பரப்புரை பயணம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
பயணத்திலும் பரப்புரைகளிலும் உடனிருந்து உதவிய நடிகர் திலகத்தின் இதயங்கள், நண்பர்கள், அன்பர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் என் உளமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கொரோனா தொற்று மீண்டும் தமிழ்நாட்டில் மிக அதிக அளவில் பரவ தொடங்கியுள்ளது. மக்கள் அனைவரும் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கூட்டமாக கூடாதிருத்தல் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் கடைபிடிக்க வேண்டிய தருணத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
வரும் ஜூலை 21 ஆம் நாள் நடிகர் திலகம் நினைவு நாளை ஒட்டி, இவ்வாண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் 108 பெண்களுக்கு தாலிக்கு அரை சவரன் தங்கம் வழங்கும் திட்டம் அன்னை இல்லம் சார்பில் தொடங்கப்பட உள்ளது. இதற்கான விதிமுறைகள் நெறிமுறைகள் யாவும் விரைவில் தெரிவிக்கப்படும். தங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் ஆதரவையும் எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்