விஜய் -பூஜா ஹெக்டே ஆட்டம் ஆரம்பமாகியது .!

‘பீஸ்ட்’ படத்தின் இரண்டாம் கட்டப்  படப்பிடிப்பு சென்னையில் இன்று தொடங்கியிருக்கிறது.

விஜய் -பூஜா ஹெக்டே நடிக்கிற இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கிவருகிறார். 

விஜய் -சன் பிக்சர்ஸ் இணைகிற படம் என்றால் அது கண்டிப்பாக பெரிய பட்ஜெட்டாகத்தான் இருக்கும். இந்த படத்தில் நடிப்பதற்காக பூஜா 5 கோடி சம்பளமாக வாங்கியிருக்கிறார் என்கிறார்கள்.

 இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்திருக்கிறது. இரண்டாம் கட்டப் படப்பிடிப்பாக இன்று தனியார் படப்பிடிப்பு அரங்கில் நடந்து கொண்டிருக்கிறது.

பீஸ்ட் (மிருகம் ) என வித்தியாசமான டைட்டில் வைக்கப்பட்டிருக்கிற படத்தின் கதை எதை நோக்கி நகரும் என்பது சஸ்பென்சாக இருக்கிறது. 

பூஜா ஹெக்டே அண்மையில் இந்த படத்துக்கான பாடலுக்காக பயிற்சி படத்தை வெளியிட்டு ஒரு பரபரப்பை கிளப்பப் பார்த்தார்கள். அந்த பாடலுக்கான காட்சிதான் தற்போது படமாக்கப்படுகிறதாம்.

 

சன் பிக்சர்ஸ்நெல்சன்பீஸ்ட்பூஜா ஹெக்டேவிஜய்