தெலுங்கு படத்தின் ஹீரோவாக விஜயசேதுபதி.!

 

 2018-ம் ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் ராம்குமார் இயக்கத்தில்  வெளியான ராட்சசன் திரைப்படம் தமிழக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதையடுத்து  மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது.

தெலுங்கில் பெல்லம்கொண்டா சீனிவாஸ் நடிப்பில் ‘ராட்சசுடு’ என்ற பெயரில் வெளியான இப்படம் அங்கு மிகப்பெரிய வெற்றி பெற்றது.  

இந்நிலையில், ‘ராட்சசுடு’ படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளதாகவும், முதல் பாகத்தை இயக்கிய ரமேஷ் வர்மா,இப்படத்தின் 2 ம்பாகத்தையும்  இயக்க உள்ளார்.  

சமீபத்தில் விஜய் சேதுபதியை சந்தித்து ராட்சசுடு 2-ம் பாகத்துக்கான கதையை இயக்குனர்  ரமேஷ் வர்மா சொன்னதாகவும்,இதையடுத்து  இப்படத்தில் விஜய்சேதுபதி ஹீரோவாக நடிக்க வாய்ப்புள்ளதாகவும் டோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது

விஜயசேதுபதி