இந்நிலையில் தனது அடுத்த தயாரிப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வி ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டுள்ளார். இப் படத்தை ‘கற்றது தமிழ்’, ‘தங்க மீன்கள்’, ‘பேரன்பு’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் ராம் இயக்குகிறார்.
இதில், மலையாளத் திரையுலகில் இளம் முன்னணி நாயகனாக வலம்வரும் நிவின்பாலி கதாநாயகனாக நடிக்கிறார். அஞ்சலி கதாநாயகியாக நடிக்கிறார்., சூரி முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்