சிலம்பரசன் ரசிகர்களுக்கு புத்தாண்டில் சக்கரைப்பொங்கல்!

‘மாநாடு ‘முன்னோட்டம் கோடியைக்கடந்து  பார்வையாளர்களின் எண்ணிக்கை எவரெஸ்ட்டை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி “ஆனந்தமென் சொல்வனே? “என புளகாங்கித தடாகத்தில் நீந்திக்கொண்டிருக்கிறார் .புதிய படங்களுக்கு பூஜை !

மாநாடு படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் “எங்கள் வாழ்வும் வளமும் எஸ்டிஆர் நீயே “என இப்பவே கனவுகளில் மூழ்கிக் கிடக்கிறார்கள்.

“அநீதி எங்கே தலை தூக்குகிறதோ ,அதை ஒழிக்க அங்கே நான் இருப்பேன்”என்கிற முழக்கத்துடன் தீபாவளிக்கு மாநாட்டை கூட்டியிருக்கிறார் சிலம்பரசன் .

ரஜினிகாந்துடன் மோதுகிற ராஜேந்தர் வீட்டு வல்லவன் !

வெங்கட் பிரபுவுக்கு புத்தாண்டு பிரகாசமாக இருக்கும் என நம்பலாம்.

புது வருஷத்திலேயாவது சிலம்பரசனுக்கு மாப்பிள்ளை பாக்கியம் கிட்டுமா ?

கடவுளே கண்ணைத் தொறப்பா !!

சிலம்பரசன்சுரேஷ் காமாட்சிமாநாடுவெங்கட்ப்ரபு