
‘மாநாடு ‘முன்னோட்டம் கோடியைக்கடந்து பார்வையாளர்களின் எண்ணிக்கை எவரெஸ்ட்டை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி “ஆனந்தமென் சொல்வனே? “என புளகாங்கித தடாகத்தில் நீந்திக்கொண்டிருக்கிறார் .புதிய படங்களுக்கு பூஜை !
மாநாடு படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் “எங்கள் வாழ்வும் வளமும் எஸ்டிஆர் நீயே “என இப்பவே கனவுகளில் மூழ்கிக் கிடக்கிறார்கள்.
“அநீதி எங்கே தலை தூக்குகிறதோ ,அதை ஒழிக்க அங்கே நான் இருப்பேன்”என்கிற முழக்கத்துடன் தீபாவளிக்கு மாநாட்டை கூட்டியிருக்கிறார் சிலம்பரசன் .
ரஜினிகாந்துடன் மோதுகிற ராஜேந்தர் வீட்டு வல்லவன் !
வெங்கட் பிரபுவுக்கு புத்தாண்டு பிரகாசமாக இருக்கும் என நம்பலாம்.
புது வருஷத்திலேயாவது சிலம்பரசனுக்கு மாப்பிள்ளை பாக்கியம் கிட்டுமா ?












