இவ்விருது குறித்து நடிகை கங்கனா தனது இன்ஸ்டாபதிவில்,கூறியுள்ளதாவது,”நான் எனக்கான பயணத்தை இமாச்சல பிரதேசத்தில் உள்ள சிறிய கிராமத்தில் இருந்து தொடங்கினேன். கிட்டத்தட்ட 8-10 ஆண்டுகள் ஆனது எனது வெற்றியை ருசிக்க. . இறுதியாக வெற்றியடைந்தபோது நான் அதை ரசிக்கவில்லை.
இதையெல்லாம் செய்வதால் எனக்கு என்ன லாபம் என மக்கள் அடிக்கடி என்னிடம் கேட்கிறார்கள்? சிலருக்குப் பணம் வேண்டும். சிலர் புகழைத் தேடுகிறார்கள் எனக்கு என்ன வேண்டும்?இது உங்கள் வேலை இல்லை என்று என்னிடம் கேள்வி கேட்கும் நிறைய பேரை இந்த விருது மவுனமாக்கும் என்றும் நடிகை கங்கனா கூறியுள்ளார்.