பணத்தை விட எதிரிகளை அதிகம் சம்பாதித்தேன்..!-‘பத்மஸ்ரீ’ விருது வாங்கிய கங்கனா அதிரடி பதிவு!!

நேற்று ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திடம் இருந்து நடிகை கங்கனா ரனாவத் “பத்ம ஸ்ரீ“ விருதைப் பெற்றுக்கொண்டார்.

இவ்விருது குறித்து நடிகை கங்கனா தனது இன்ஸ்டாபதிவில்,கூறியுள்ளதாவது,”நான் எனக்கான பயணத்தை இமாச்சல பிரதேசத்தில் உள்ள சிறிய கிராமத்தில் இருந்து தொடங்கினேன். கிட்டத்தட்ட 8-10 ஆண்டுகள் ஆனது எனது வெற்றியை ருசிக்க. . இறுதியாக வெற்றியடைந்தபோது நான் அதை ரசிக்கவில்லை.

காரணம் நான் பெரிய தயாரிப்பாளர்களின் படங்களில் நடிப்பதை விட்டுவிட்டு வேறு விஷயங்களில் கவனத்தை செலுத்தி வந்தேன். இதனால் நான் பணம் சம்பாதிப்பதைவிட அதிகமான எதிரிகளை சம்பாதித்தேன்.

இதையெல்லாம் செய்வதால் எனக்கு என்ன லாபம் என மக்கள் அடிக்கடி என்னிடம் கேட்கிறார்கள்? சிலருக்குப் பணம் வேண்டும். சிலர் புகழைத் தேடுகிறார்கள் எனக்கு என்ன வேண்டும்?இது உங்கள் வேலை இல்லை என்று என்னிடம் கேள்வி கேட்கும் நிறைய பேரை இந்த விருது மவுனமாக்கும் என்றும் நடிகை கங்கனா கூறியுள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Kangana Thalaivii (@kanganaranaut)