தெலுங்கில் ‘யாதலோ மௌனம்’ என்றும் இதற்கு பெயரிடப்பட்டுள்ளது.
சிவாஜியின் பேரனும் ராம்குமாரின் இளயமகனுமான தர்ஷன் கணேசன் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு மருமகள் முறையான ஸ்ரீஷா ஆகியோர் விக்னேஷ் சிவசுப்ரமணியம் மற்றும் வெஸ்டா சென்னுடன் இணைந்து இதில் நடித்துள்ளனர். இயக்குநர் லட்சுமி தேவி நாட்டியப் பேரொளி பத்மினி ராமச்சந்திரனின் கொள்ளு பேத்தி முறை என்பது குறிப்பிடத்தக்கது. சிவாஜி கணேசனும் பத்மினியும் இணைந்து 50 படங்களுக்கு மேல் நடித்திருப்பதை தமிழ் ரசிகர்கள் மறக்கமுடியாது.
இந்த காணொளிக்கு அறிமுக இசையமைப்பாளர் வருண் மேனனுடன் இணைந்து பிரபல இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி இசையமைத்துள்ளார். பாடலையும் அவரே பாடியுள்ளார்.
லட்சுமி தேவியின் ‘வென் தி மியூசிக் சேஞ்சஸ்’ திரைப்படத்திற்குப் பிறகு இந்த வேடிக்கை நிறைந்த இசை வீடியோ இப்போது ஐடியூன்ஸில் கிடைக்கிறது. இப்படம் ஹாலிவுட்டில் நேர்மறை விமர்சனங்களைப் பெற்று வருகிறது. மேலும், லைவ் ஆக்ஷன் ஷார்ட் பிரிவில் அதிகாரப்பூர்வமாக ஆஸ்கார் விருதுக்கும் போட்டியிடுகிறது