சிவாஜி பேரனும்,பத்மினி கொள்ளுப்பேத்தியும் இணைந்த ‘காதல் எங்கே’!
நடிகர்திலகம் சிவாஜி கணேசன் மற்றும் ஸ்ரீதேவி குடும்ப வாரிசுகள் பத்மினி குடும்பத்தை சேர்ந்த லட்சுமி தேவி இயக்கிய ‘காதல் எங்கே’ இசை வீடியோவுக்காக இணைந்துள்ளனர்.தெலுங்கில் ‘யாதலோ மௌனம்’ என்றும் இதற்கு பெயரிடப்பட்டுள்ளது.
சிவாஜியின் பேரனும் ராம்குமாரின் இளயமகனுமான தர்ஷன் கணேசன் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு மருமகள் முறையான ஸ்ரீஷா ஆகியோர் விக்னேஷ் சிவசுப்ரமணியம் மற்றும் வெஸ்டா சென்னுடன் இணைந்து இதில் நடித்துள்ளனர். இயக்குநர் லட்சுமி தேவி நாட்டியப் பேரொளி பத்மினி ராமச்சந்திரனின் கொள்ளு பேத்தி முறை என்பது குறிப்பிடத்தக்கது. சிவாஜி கணேசனும் பத்மினியும் இணைந்து 50 படங்களுக்கு மேல் நடித்திருப்பதை தமிழ் ரசிகர்கள் மறக்கமுடியாது.
Related Posts
இந்த காணொளிக்கு அறிமுக இசையமைப்பாளர் வருண் மேனனுடன் இணைந்து பிரபல இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி இசையமைத்துள்ளார். பாடலையும் அவரே பாடியுள்ளார்.
வாழ்வை ஒவ்வொரு கணமும் அனுபவித்து வாழ்வது மற்றும் தவறவிட்ட வாய்ப்புகள் பற்றிய பாடலை மாடத்தி மற்றும் காப்பான் புகழ் அபிநந்தன் ராமானுஜம் அழகாக படமாக்கியுள்ளார். இயக்குநர்கள் ஷங்கர் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் போன்றோரிடம் பணிபுரியும் அந்தோணி கோன்சால்வேஸ் படத்தொகுப்பை கையாண்டுள்ளார்.லட்சுமி தேவியின் ‘வென் தி மியூசிக் சேஞ்சஸ்’ திரைப்படத்திற்குப் பிறகு இந்த வேடிக்கை நிறைந்த இசை வீடியோ இப்போது ஐடியூன்ஸில் கிடைக்கிறது. இப்படம் ஹாலிவுட்டில் நேர்மறை விமர்சனங்களைப் பெற்று வருகிறது. மேலும், லைவ் ஆக்ஷன் ஷார்ட் பிரிவில் அதிகாரப்பூர்வமாக ஆஸ்கார் விருதுக்கும் போட்டியிடுகிறது