விஜய் ஆண்டனியுடன் இணைந்த மேகா ஆகாஷ்!

விஜய் ஆண்டனி நடிக்கும் புதிய  படம் “மழை பிடிக்காத மனிதன் “   இப்படத்தை ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான விஜய் மில்டன்  எழுதி, இயக்குகிறார். ஆக்சன், கமர்ஷியல் படமாக உருவாகவுள்ள இப்படம், முதல் முறையாக தாமன் & தியூ பகுதியில் படமாக்கப்படும் முதல் தமிழ்ப் படம் ஆகும். இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு நடந்து வருகிறது, 2022 ஆம் ஆண்டு மத்தியில் இப்படம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. திரையை தன் அழகால் வசியப்படுத்தும் தேவதை, மேகா ஆகாஷ் நாயகியாக நடிக்கிறார். சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் மிக முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். கன்னட நடிகர்களான தனஞ்செயா மற்றும் ப்ருத்வி அம்பர் இப்படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார்கள். இவர்களுடன்,சரண்யா பொன்வண்ணன், முரளி சர்மா, தலைவாசல் விஜய், சுரேந்தர் தாகூர் பிரணிதி ஆகியோரும் இப்படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். இயக்குநர் ரமணா ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

கதாநாயகனின் வாழ்க்கையில் பத்து அத்தியாயங்களை காலவரிசைப்படி கடந்து செல்லும் ஒரு தனித்துவமான கதைக்களத்தை, மழை பிடிக்காத மனிதன் படத்தில் உருவாக்கியுள்ளார் இயக்குனர் விஜய் மில்டன், இந்தப் படம் சலீம் படத்தின் நேரடித் தொடர்கதை என்றும் தயாரிப்பாளர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

இப்படத்தை எழுதி இயக்குவது மட்டுமின்றி, ‘மழை பிடிக்காத மனிதன் படத்துக்கு விஜய் மில்டன் ஒளிப்பதிவும் செய்கிறார். விஜய் ஆண்டனி பாடல்களுக்கு இசையமைக்க, அச்சு ராஜாமணி பின்னணி இசையை கவனிக்கிறார். படத்தொகுப்பாளராக லியோ ஜான்பால், கலை இயக்குநராக K.ஆறுசாமி, ஸ்டண்ட் மாஸ்டராக சுப்ரீம் சுந்தர், நடன இயக்குநராக ஸ்ரீதர், ஸ்டில்களை மகேஷ் ஜெயச்சந்திரன், விளம்பர வடிவமைப்பாளராக பவன் (சிந்து கிராபிக்ஸ்), ஆடை வடிவமைப்பாளராக ஷிமோனா ஸ்டாலின். பணிபுரிகின்றனர்.

இப்படத்தை  கமல் போஹ்ரா, லலிதா தனஞ்செயன், பிரதீப் B, பங்கஜ் போஹ்ரா மற்றும்  S. விக்ரம் குமார் ஆகியோருடன்  இணைந்து INFINITI FILM VENTURES,  தயாரிக்கிறார்கள்.