
கதாநாயகனின் வாழ்க்கையில் பத்து அத்தியாயங்களை காலவரிசைப்படி கடந்து செல்லும் ஒரு தனித்துவமான கதைக்களத்தை, மழை பிடிக்காத மனிதன் படத்தில் உருவாக்கியுள்ளார் இயக்குனர் விஜய் மில்டன், இந்தப் படம் சலீம் படத்தின் நேரடித் தொடர்கதை என்றும் தயாரிப்பாளர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
இப்படத்தை எழுதி இயக்குவது மட்டுமின்றி, ‘மழை பிடிக்காத மனிதன் படத்துக்கு விஜய் மில்டன் ஒளிப்பதிவும் செய்கிறார். விஜய் ஆண்டனி பாடல்களுக்கு இசையமைக்க, அச்சு ராஜாமணி பின்னணி இசையை கவனிக்கிறார். படத்தொகுப்பாளராக லியோ ஜான்பால், கலை இயக்குநராக K.ஆறுசாமி, ஸ்டண்ட் மாஸ்டராக சுப்ரீம் சுந்தர், நடன இயக்குநராக ஸ்ரீதர், ஸ்டில்களை மகேஷ் ஜெயச்சந்திரன், விளம்பர வடிவமைப்பாளராக பவன் (சிந்து கிராபிக்ஸ்), ஆடை வடிவமைப்பாளராக ஷிமோனா ஸ்டாலின். பணிபுரிகின்றனர்.
இப்படத்தை கமல் போஹ்ரா, லலிதா தனஞ்செயன், பிரதீப் B, பங்கஜ் போஹ்ரா மற்றும் S. விக்ரம் குமார் ஆகியோருடன் இணைந்து INFINITI FILM VENTURES, தயாரிக்கிறார்கள்.