அப்படி என்னய்யா சிறப்பு ‘வீட்ல விஷேசம் ‘படத்தில?

ஜீ ஸ்டுடியோஸ் ,பே வியூ  நிறுவனங்கள்  ரோமியோ பிக்சர்ஸுடன்  இணைந்து தயாரிக்கும் படம்தான் வீட்ல விசேஷம்.,ஆர்ஜே பாலாஜி நடிக்கும் இந்தப்படம்  ஜூன் 17, 2022   திரையரங்குகளில் வெளியாகிறது!

தயாரிப்பாளர் போனி கபூர்  தனக்கென ஒரு இடத்தை தமிழகத்தில் பிடிக்க வேண்டும் என்கிற முயற்சியில் எடுத்துக்கொண்ட இந்தப்படம் இந்தியில் வெளியான ‘பதாய் ஹோ’வின் தழுவல்.

நடிகரும் இயக்குனருமான ஆர்ஜே பாலாஜி,  முதன்மை பாத்திரத்தில் நடிக்க, அபர்ணா பாலமுரளி நாயகியாக நடித்துள்ளார். தவிர,  தலைசிறந்த நடிகர்களான சத்யராஜ் மற்றும் ஊர்வசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மறைந்த நடிகை  லலிதா, சீமா, ரமா, பிரதீப் கோட்டயம், புகழ், ஷிவானி நாராயணன், யோகி பாபு, ரவிக்குமார் மேனன், ஷங்கர் சுந்தரம் மற்றும் பல  முக்கிய நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

கார்த்திக் முத்துக்குமார் (ஒளிப்பதிவு), விஜயகுமார் (கலை), பா.விஜய் (பாடல் வரிகள்), செல்வ ஆர்கே. (எடிட்டிங்), கிரீஷ் கோபாலகிருஷ்ணன் (இசை), தினேஷ் (நடன அமைப்பு), சாந்தனு ஸ்ரீவஸ்தவ்-அக்சத் கில்டியல் (கதை), திவ்யா நாகராஜன் (ஆடைகள்),  விஜய் ரத்தினம்  (ஒலி வடிவமைப்பு),  ரஹ்மத்துல்லா (ஒலி கலவை), . ஹரிஹர சுதன் (விஎஃப்எக்ஸ்), ராஜராஜன் கோபால் ( கலரிஸ்ட்), ராமமூர்த்தி (ஸ்டில்ஸ்), கபிலன் (பப்ளிசிட்டி டிசைன்ஸ்), விக்கி (தயாரிப்பு நிர்வாகி), . செல்வ குமார்-சிவ குமார் (தயாரிப்பு மேலாளர்),சுரேஷ் சந்திரா-ரேகா டி’ஒன் (மக்கள் தொடர்பு),சுரேந்தர்,ஜெ  ஜெகன் கிருஷ்ணன், கார்த்திக்கோபி,  சிவகுரு,  குமரன், விஷ்ணு கார்த்திகேயன், சிற்றரசன் (திரைக்கதை குழு) , பாலாஜி மற்றும் நண்பர்கள் (திரைக்கதை & வசனம்) இந்த திரைப்படத்தில் முக்கிய தொழில்நுட்ப வல்லுநர்களாக பணியாற்றியுள்ளனர்.

பொதுவாக, பெரும்பான்மையான திரைப்படங்கள் கதாநாயகர்களை போலீஸ்காரர்களாகவோ, ரௌடிகளாகவோ அல்லது தீவிரமான பாத்திரங்களாகவோ தான்  சித்தரிக்கின்றன. மாறாக, வீட்ல விஷேஷம் ஒரு எளிமையான இளைஞனைப் பற்றியது, அவன் குடும்பத்திற்குள் எழும் சில எதிர்பாரா சிக்கல்களை அசாதாரண சூழலை, அவன் எதிர்கொள்வதை   வேடிக்கை மற்றும் பொழுதுபோக்குடன் இத்திரைப்படம் சொல்கிறது.   ஜூன்

17, 2022  ல் மாணவர்கள் தங்கள் கல்வி ஆண்டை  முடித்திருப்பார்கள் என்பதால் அப்போது குடும்பங்களோடு அனைவரும் இப்படத்தை கொண்டாட முடியுமென்று, அன்றைய தினத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

 

ஆர்ஜே பாலாஜிசத்யராஜ்.ஊர்வசிபோனிகபூர்யோகிபாபுவீட்ல விசேஷம்ஷிவானி நாராயணன்