விக்ரம் பிரபு நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘டாணாக்காரன்’ திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றதுடன் விமர்சனரீதியாகவும் பெரும் பாராட்டுக்களை குவித்தது.
குறிப்பாக இப்படத்தில் விக்ரம் பிரபுவின் சிறப்பான நடிப்பு, அனைவராலும் பாராட்டப்பட்டது. உடலை வருத்தி தன்னை அந்த கதாப்பாத்திரமாக மாற்றிகொண்டு, வாழ்ந்திருந்தார் விக்ரம் பிரபு. தற்போது அடுத்தடுத்து பல அற்புதமான படைப்புகள் அவரது நடிப்பில் வெளியாக காத்திருக்கின்றன. இந்நிலையில் விக்ரம் பிரபு நடிக்கும் இந்த புதிய படத்துக்கு , “இரத்தமும் சதையும்” என பெயரிடப்பட்டுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.