செக்ஸ் நடிகை சன்னி லியோனின் ‘ஓ மை கோஸ்ட் !”தமிழ்ப்படம்.!

டி  .வீரா சக்தி ,கே.. சசிகுமார் வழங்கும், சன்னி லியோன், சதீஷ்நடிப்பில், இயக்குநர் யுவன் இயக்கத்தில், வரலாற்று பின்னணியில் உருவாகும்  ஹாரர் காமெடி  திரைப்படம்  “ஓ மை கோஸ்ட்”  இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடந்தேறியது.
இந்த விழாவில் நடிகரும் தயாரிப்பாளருமாகிய ஆர்.கே.சுரேஷ் ,நடிகை சன்னிலியோன் மனித நேயமிக்க நபர் என்று பாராட்டினார்.
இயக்குநர் தங்கர் பச்சான் பேசியபோது “இந்தப்படமும் அடுத்து நான் இயக்கபோகும் படமும் 
 தமிழ் சினிமாவின் போக்கை மாற்றும் படமாக இருக்கும். ” இருக்கும் என்கிற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

ஜிபி முத்து வுக்கு இதுதான் முதல்படமாம்.ஆதரவு தரும்படி கேட்டுக்கொண்டார்.

நடிகர் சதீஷ் பேசியபோது “இந்த படத்தின் கதையை இயக்குநர் கூறியபோது, அதில் ஒரு முக்கிய கதாபாத்திரம் இருந்தது. அதில் சன்னி லியோன் நடிக்கிறார் என்ற உடன், நான் இந்த படத்தில் நடிக்க ஒத்து கொண்டேன். “என்றார் .

நடிகை சன்னி லியோன் பேசுகையில் ” எங்களது கனவை நீங்கள் பார்க்க போகிறீர்கள். உங்களது அன்பும் ஆதரவும் எங்களுக்கு தேவை.”என்று கேட்டுக்கொண்டார்.தயாரிப்பாளர் வீர சக்தி ,தயாரிப்பாளர் கே..சசிகுமார் ஆகியோரும் பேசினார்கள்.

இப்படத்தில் சதீஷ் மற்றும் தர்ஷா குப்தா முக்கிய பாத்திரங்களில் நடிக்க, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ரவி மரியா, ரமேஷ் திலக், அர்ஜுனன், தங்கதுரை ஆகியோருடன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர். ஜாவித் ரியாஸ் இசையமைக்க, தீபக் டி.. மேனன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

 
 
ஓ மை கோஸ்ட்சதிஷ்சன்னி லியோன்ஜி.பி.முத்துடி ஒன்