நயனை நம்பிய கோவை சுப்பையா தப்புவாரா?

சில நேரங்களில் விதி கடுமையாக விளையாடி விடும்.

அப்படித்தான் ஒரு விநியோகஸ்தர் நடிகை நயன்தாராவை நம்பி ஒரு படத்தை வாங்கியிருந்தார். அவர் வேறு யாருமல்லர் ,மாநாடு படத்தை வாங்கிய கோவை சுப்பையாதான்.!

இயக்குநர் அல்போன்ஸ்புத்திரன் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் படம் கோல்டு.

மலையாளம் , தமிழ் ஆகிய மொழிகளில்  வெளியாகவிருக்கும் இந்தப்படத்தில் பிருத்விராஜ், நயன்தாரா ஆகியோர் நாயகன் நாயகியாக நடித்துள்ளனர்.

இப்படம் ஓணம் பண்டிகையையொட்டி செப்டம்பர் 8 ஆம் தேதி மலையாளம் தமிழில் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருந்தது.

கோவை சுப்பையா இந்தப்படத்தைத் தமிழில் வெளியிடும் உரிமையைப் பெற்றிருந்தார்.அதற்காக அவர் கொடுத்த விலை சுமார் தொண்ணூறு இலட்சம்.

ஆனால், ஓணம் பண்டிகையில் படம் வெளியாகவில்லை.

, டிசம்பர் ஒன்றாம் தேதி (இன்று) அப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

இன்றும் அந்தப்படம் தமிழில் வெளியாகவில்லை. மலையாளத்தில் மட்டும் வெளியாகிறது. 

தமிழ் உரிமை வாங்கிய கோவை சுப்பையா வயிற்றில் கடா புடா சத்தம்.!.   மலையாளத்தில் ஓகே என்றால் தப்பிக்கலாம் .

அங்கு சுருண்டு விட்டால் இங்கும் படுத்து விடுகிரா ஆபத்து இருக்கிறது.

இதனால் இன்று கேரளாவில் வெளியாகும் கோல்டு படத்தின் முடிவுக்காகக் கண் துஞ்சாமல் காத்திருக்கிறாராம் கோவைசுப்பையா.பாவம்யா!

 

அல்போன்ஸ் புத்திரன்கோல்ட்கோவை சுப்பையாநயன்தாராபிருத்விராஜ்