இப்படம் சூப்பர் ஹீரோ கதையம்சம் படமாக வீரன் இருக்கக் கூடும் என பலரும் கூறி வரும் நிலையில், ‘மின்னல்’மனிதன் கெட்டப்பில் ஹிப் ஹாப் ஆதி தோன்றும் போஸ்டர் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்புக்குள்ளாகியுள்ளது.
மரகத நாணயம் ஏ ஆர் கே சரவணன் இயக்கும் இப்படத்தில் ஹிப் ஹாப் ஆதி நடித்து இசையமைக்கிறார். தீபக் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.இப்படம் வரும் கோடை விடுமுறையில் திரைக்கு வரும் என்று அதிகாரபூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.