சூப்பர் ஹீரோ கதையில் ‘ஹிப் ஹாப்’ ஆதி!
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் பிறந்தநாளையொட்டி,ஹிப் ஹாப் ஆதி நடித்து வரும் திரைப்படமான ‘வீரன்’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.
இப்படம் சூப்பர் ஹீரோ கதையம்சம் படமாக வீரன் இருக்கக் கூடும் என பலரும் கூறி வரும் நிலையில், ‘மின்னல்’மனிதன் கெட்டப்பில் ஹிப் ஹாப் ஆதி தோன்றும் போஸ்டர் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்புக்குள்ளாகியுள்ளது.
மரகத நாணயம் ஏ ஆர் கே சரவணன் இயக்கும் இப்படத்தில் ஹிப் ஹாப் ஆதி நடித்து இசையமைக்கிறார். தீபக் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.இப்படம் வரும் கோடை விடுமுறையில் திரைக்கு வரும் என்று அதிகாரபூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.