இப்படத்தின் மூலம் இயக்குனராகவும் களமிறங்கும் பிரபல யூ டியூபர் ராஜ் மோகன் கூறுகையில்,”நீண்ட நாட்களாக இயக்குனராகும் ஆசை என்னுள் இருந்தது .என்ன மாதிரியான கதையை இயக்கலாம் என யோசித்த நிலையில், இந்த தலைமுறையை கவரும் விதமாக, டீன் ஏஜில் அடியெடுத்து வைக்கும் 11ஆம் வகுப்பு படிக்கும் பள்ளிக்கூட வாழ்க்கை பற்றிய கதையை இயக்க முடிவு செய்து, ரோமியோ பிக்சர்ஸ் ராகுலிடம் கதையை சொன்னேன் அவருக்கும் கதை பிடித்திருந்தது உடனே ஓகே சொன்னார் இந்த படத்தோட ஒன் லைன் என்னன்னு பார்த்தோம்னா,’ 2 கே’ கிட்ஸுக்கு இருக்கிற பிரச்சனை தான்.இதன் கலகலப்பான திரைக்கதையாக்கப்பட்டுள்ளது.
இப்படம் முழுவதும் நகைச்சுவையாக சொல்லியுள்ளேன் அதே சமயம் இறுதியில் 2 கே கிட்ஸுக்கு ஒரு முக்கியமான விஷயத்தையும் என் பாணியில் சொல்லி இருக்கிறேன். இப்படத்தின் படப்பிடிப்பை மொத்தம் 35 நாட்களில் படமாக்கி முடித்திருக்கிறோம் தற்போது இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் நடந்து வருகிறது வரும் ஜூன் மாதம் இப்படத்தை திரையிட திட்டமிட்டு இருக்கிறோம் இவ்வாறு அவர் கூறினார். இப்படத்தின் ஒளிப்பதிவை சுதர்சன் சீனிவாசன் கவனிக்க, சந்தோஷ் தயாநிதி இசையமைத்து வருகிறார்.