“பாபா பிளாக்‌ ஷீப்” அம்மு அபிராமியுடன், விருமாண்டி அபிராமி !

‘ரோமியோ பிக்சர்ஸ்’ ராகுல் தயாரிப்பில் ராஜ்மோகன் ஆறுமுகம் இயக்கியுள்ள புதிய படம்  “பாபா பிளாக்‌ ஷீப்”.இப்படத்தில் அம்மு அபிராமி,’விருமாண்டி’ அபிராமி,அயாஸ்,நரேந்திர பிரசாத்.ஆர்.ஜெ. விக்னேஷ்காந்த்,சுப்பு பஞ்சு,சுரேஷ் சக்ரவர்த்தி,போஸ் வெங்கட்,வினோதினி வைத்தியநாதன்,சேட்டை ஷெரீப்,மதுரை முத்து,கேபிஒய் பழனி,ஓஏகே சுந்தர்,நக்கலைட்ஸ் பிரசன்னா,நக்கலைட்ஸ் தனம் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் மூலம் இயக்குனராகவும் களமிறங்கும்  பிரபல யூ டியூபர்  ராஜ் மோகன் கூறுகையில்,”நீண்ட நாட்களாக இயக்குனராகும் ஆசை என்னுள்  இருந்தது .என்ன மாதிரியான கதையை இயக்கலாம் என யோசித்த நிலையில், இந்த தலைமுறையை கவரும் விதமாக, டீன் ஏஜில் அடியெடுத்து   வைக்கும்    11ஆம் வகுப்பு படிக்கும் பள்ளிக்கூட வாழ்க்கை பற்றிய கதையை இயக்க முடிவு செய்து, ரோமியோ பிக்சர்ஸ் ராகுலிடம் கதையை சொன்னேன் அவருக்கும் கதை பிடித்திருந்தது உடனே ஓகே சொன்னார் இந்த படத்தோட ஒன் லைன் என்னன்னு பார்த்தோம்னா,’ 2  கே’ கிட்ஸுக்கு  இருக்கிற பிரச்சனை தான்.இதன் கலகலப்பான திரைக்கதையாக்கப்பட்டுள்ளது.

பக்கத்துல பக்கத்துல ரெண்டு பள்ளிக்கூடங்கள். எப்பவுமே சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க இந்த ரெண்டு ஸ்கூல் பசங்களையும் ஒண்ணா சேர்க்க வேண்டும் என்று நினைக்கிற அம்மு அபிராமி, இதையடுத்து என்ன நடக்கிறது என்பது தான் இந்த படத்தோட மீதி கதை. குழந்தை நட்சத்திரமா நடிச்சிட்டு வந்த அம்மு அபிராமி, இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இந்த பள்ளிக்கூடங்களின் ஆசிரியர்களாக மதுரை முத்து,சுப்பு பஞ்சு, கே பி ஒய் பழனி, வினோதினி வைத்தியநாதன், உள்பட தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகர் நடிகைகள் பல நடித்துள்ளனர்

இப்படம் முழுவதும் நகைச்சுவையாக சொல்லியுள்ளேன் அதே சமயம் இறுதியில் 2 கே கிட்ஸுக்கு  ஒரு முக்கியமான விஷயத்தையும் என் பாணியில் சொல்லி இருக்கிறேன்.  இப்படத்தின் படப்பிடிப்பை மொத்தம் 35 நாட்களில் படமாக்கி முடித்திருக்கிறோம் தற்போது இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள்  நடந்து வருகிறது வரும் ஜூன் மாதம் இப்படத்தை திரையிட திட்டமிட்டு இருக்கிறோம் இவ்வாறு அவர் கூறினார். இப்படத்தின் ஒளிப்பதிவை  சுதர்சன் சீனிவாசன் கவனிக்க, சந்தோஷ் தயாநிதி இசையமைத்து வருகிறார்.