நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் ,மும்பையில் லால் சலாம் படப்பிடிப்பில் நடித்து வருகிறார். கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் ரஜினியை முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் திடீரென சந்தித்து பேசியுள்ளார். இதுகுறித்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி வரும் படம் என்பதால் அதுகுறித்து இருவரும் பேசியிருக்கலாம் என்றும் .மேலும், ஏற்கனவே ரஜினிகாந்த் – கபில் தேவ் இருவரும் நண்பர்கள் என்பதால், இது நட்பு ரீதியான சந்திப்பாகவே இருக்கலாம் என கூறப்படுகிறது.
இதுதொடர்பான புகைப்படத்தை கபில்தேவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சிறந்த மனிதனுடன் இருப்பதை பெருமையாகவும் பாக்கியமாகவும் கருதுவதாக குறிப்பிட்டுள்ளார்
ஜெயிலர் ரஜினி கெட்டப்பை தொடர்ந்து தற்போது லால் சலாம் ரஜினியின் மொய்தீன் பாய் கதாப்பாத்திரத்தின் கெட்டப்பும் வெளியாகியுள்ளதால் ரஜினி ரசிகர்கள் ஏகத்துக்கும் உற்சாகத்தில் உள்ளனர்.