ரெய்டு ( விமர்சனம்.) விதி வலியது.

நல்லவனாக வாழ ஆசைப்படுகிறவனை இந்த சமூகம் எவ்வாறு மாற்ற விரும்புகிறது, அந்த முயற்சியை முறியடித்து தன்வழியில் செல்கிற அந்த நேர்மையான அதிகாரி எப்படியெல்லாம் சீராமப்படுகிறான் என்பதை சொல்கிறது ரெய்டு . 

காக்கிசட்டைக்குள் கம்பீரமாக அமர்ந்து கொண்டிருக்கிறார் விக்ரம் பிரபு. . நீதி நேர்மை என்பதெல்லாம் வாய்ப் பேச்சுடன் நின்றுவிடவேண்டும் என்கிற காவல் துறையின்  எழுதப்படாத விதி இவருக்கு செட்டாகவில்லை !ஆக்ஷன் ,ஆவேசம் அள்ளிவரும் மோதல்கள்,அநீதி கண்டு பொங்கும் இயல்பு கச்சிதமாக பொருந்திப்போகிறார் விக்ரம் பிரபு.அன்னை இல்லத்தின் கொடை .

என்னவோ தெரியவில்லை , ,நாயகி இவருக்கு  அந்நியமாகி விடுகிறார்.திரையில் இருந்து விலகி விட்ட உணர்வு ஸ்ரீ திவ்யா. பொருந்த வில்லை. கன்னட கதையை ரீமேக் செய்யும் அளவுக்கு அப்படி அதில் என்னதான் கவர்ந்திழுத்தது  என வியந்து போய்விடுகிறார்கள் ரசிகர்கள். அனந்திகா அடிசனல் ஹீரோயின் .

இயக்குநர் வேலுபிரபாகரன், ரிஷிரித்விக்,  ஆகியோர் வில்லன்கள் .இவர்களெல்லாம் வில்லனா என்று ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது கேஸ்டிங் குழு  

கதிரவனின் ஒளிப்பதிவில்  அழுத்தம் . காட்சிகளை வாழ வைத்திருக்கிறது 

சாம்.சி.எஸ் இசை. தீபாவளி மோடில் பாடல்கள். 

வசனங்கள்  இயக்குநர் முத்தையா. 

கார்த்தி எனும் புதியவர் இயக்கியிருக்கிறார். 

ரெய்டில் கனமாக எதுவும் சிக்கவில்லை. “எங்கிட்ட மாட்டாதே.. காணாமப் போயிடுவே” இது பட பாடல் வரி.

–தேவிமணி 

கார்த்திடி ஒன் பி ஆர் ஒமுத்தையாரெய்டுவிக்ரம் பிரபுஸ்ரீ திவ்யா