இந்நிகழ்வில் நடிகர்கள் கமல்ஹாசன்,சரத்குமார், ராதாரவி,ஜெயம்ரவி, பெப்ஸிசங்கத்தலைவர் ஆர்.கே.செல்வமணி ,கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பங்கேற்று பேசினர்.
நிகழ்வில் கமல்ஹாசன் பேசியதாவது,’ விஜயகாந்தை நான் முதலில் சந்தித்தபோது அவர் எப்படி என்னுடன் பழகினாரோ இறுதிவரை அப்படியேதான் இருந்தார்/. பெரிய நடிகர் ஆனதுக்கு பிறகும் விஜய் ராஜுக்கும் விஜயகாந்த் இது ரெண்டுக்கும் வித்தியாசம் தெரியாம வச்சுக்கிட்டு இறுதிவரை என்னுடன் பழகினார் அதுக்கு காரணம் நான் அல்ல அவர். விஜயகாந்த் பல விமர்சனங்களை அவமானங்களை தாங்கி மேலே வந்தவர்.. இதற்காக அவர் யார் மீதும் எந்த காழ்ப்புணர்ச்சியும் வைத்துக் கொள்ளவில்லை. தனக்கு ஏற்பட்ட அவமானங்கள் யாருக்கும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் முனைப்பாக இருந்தவர.. அது பாராட்டப்பட வேண்டிய ஒரு விஷயம்.. ஆரம்ப நிலை நடிகர்களுக்கும், கடைநிலை நடிகர்களுக்கும் ஒரு குரலாக இருந்தவர் விஜயகாந்த்.. அது அவர்கள் செய்த பாக்கியம்.. தமிழக அரசியல் வரலாற்றில் பெரிய தலைவர்களுக்கு எல்லாம் வரும் கூட்டம், இவருக்காகவும் வந்ததை நான் பார்த்தேன். அது தான்அவர் சேர்த்த சொத்து. விஜயகாந்த் உதவி செய்வது மற்றவர்களுக்கு தெரியாது.20 வருடங்களுக்கு முன்பே கல்லூரிக்கு பீஸ் கட்ட முடியாத 3 பொறியியல் மாணவர்களை தேடிப்போய் பீஸ் கட்டி படிக்க வைத்தவர் அவர்.