விஜயகாந்த் பல விமர்சனங்களை அவமானங்களை தாங்கி மேலே வந்தவர்.! -கமல் புகழாரம்!!

நடிகர் சங்கம் சார்பாக மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்கு நினைவேந்தல் கூட்டம் இன்று மாலை சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நினைவேந்தல் கூட்டம் நடந்தது. இந்நிகழ்வில் நடிகர்சங்கத் தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, பூச்சிமுருகன் உள்ளிட்ட அனைத்து பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.அனைவரும் விஜயகாந்த்தின் படத்திற்கு மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்வில் நடிகர்கள் கமல்ஹாசன்,சரத்குமார், ராதாரவி,ஜெயம்ரவி, பெப்ஸிசங்கத்தலைவர் ஆர்.கே.செல்வமணி ,கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பங்கேற்று பேசினர்.

நிகழ்வில் கமல்ஹாசன் பேசியதாவது,’ விஜயகாந்தை நான் முதலில் சந்தித்தபோது அவர் எப்படி என்னுடன் பழகினாரோ இறுதிவரை அப்படியேதான் இருந்தார்/. பெரிய நடிகர் ஆனதுக்கு பிறகும் விஜய் ராஜுக்கும் விஜயகாந்த் இது ரெண்டுக்கும் வித்தியாசம் தெரியாம வச்சுக்கிட்டு இறுதிவரை என்னுடன் பழகினார் அதுக்கு காரணம் நான் அல்ல அவர். விஜயகாந்த் பல விமர்சனங்களை அவமானங்களை தாங்கி மேலே வந்தவர்.. இதற்காக அவர் யார் மீதும் எந்த காழ்ப்புணர்ச்சியும் வைத்துக் கொள்ளவில்லை. தனக்கு ஏற்பட்ட அவமானங்கள் யாருக்கும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் முனைப்பாக இருந்தவர.. அது பாராட்டப்பட வேண்டிய ஒரு விஷயம்.. ஆரம்ப நிலை நடிகர்களுக்கும், கடைநிலை நடிகர்களுக்கும் ஒரு குரலாக இருந்தவர் விஜயகாந்த்.. அது அவர்கள் செய்த பாக்கியம்.. தமிழக அரசியல் வரலாற்றில் பெரிய தலைவர்களுக்கு எல்லாம் வரும் கூட்டம், இவருக்காகவும் வந்ததை நான் பார்த்தேன். அது தான்அவர் சேர்த்த சொத்து. விஜயகாந்த் உதவி செய்வது மற்றவர்களுக்கு தெரியாது.20 வருடங்களுக்கு முன்பே கல்லூரிக்கு பீஸ் கட்ட முடியாத 3 பொறியியல் மாணவர்களை தேடிப்போய் பீஸ் கட்டி படிக்க வைத்தவர் அவர்.

70 80களில் அந்த சமூக அரசியல்களில் பிரதிபலிக்கும் கோபங்களின் சினிமா உருவமாக விஜயகாந்த் திகழ்ந்தார் என்றால் அது மிகையாகாது… விஜயகாந்தின் இறுதி அஞ்சலியின் போது சொன்னேன் விஜயகாந்திடம் பிடித்த பல நல்ல குணங்களில் எனக்கு பிடித்த ஒரு குணம் அவரது நியாயமான கோபம் . அவர் நாக்கை கடித்துக் கொண்டு ஒரு கிராமத்து ஆள் மாதிரி கேட்க வேண்டியதை துணிச்சலாக கேட்டு விடுவார் அந்தத் துணிச்சல் பல நேரங்களில் நடிகர் சங்கத்துக்கும் உதவியாக இருந்திருக்கிறது அதற்கு சாட்சியாக பல நடிகர்கள் உள்ளனர்.குட்பை கேப்டன் குட்பை விஜயகாந்த் இவ்வாறு அவர் பேசினார்