சர்வதேச அளவில் 30க்கும் மேற்பட்ட விருதுகளை வென்று அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கும் ” தூவள் ” படத்தை தொடர்ந்து ‘சிஜெர் பிக்சர்ஸ்’ கமலகுமாரி, ராஜ்குமார்.என் ஆகியோர் தங்களது இரண்டாவது படைப்பாக தயாரிக்கும் புதிய படத்திற்கு ‘எக்ஸ்டிரீம்’ என பெயரிட்டுள்ளனர்.
இப்படத்தை ” தூவள் ” பட இயக்குனர் ராஜவேல் கிருஷ்ணா.இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். இப்படத்தில் ‘சின்னத்திரை’ ரக்ஷிதா மஹாலக்ஷ்மி , ‘அயலி’ அபி நட்சத்ரா , ஆனந்த் நாக், ‘சிக்லெட்’ அம்ரிதா ஷெல்டர்,ஆகியோர் முக்கிய கதாபா த்திரங்களில் நடிக்க,இவர்களுடன் ராஜ்குமார், சிவம் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் ஒளிப்பதிவை டி.ஜே பாலா கவனிக்க, ராஜ் பிரதாப் இசையமைக்கிறார்.இப்படம் குறித்து இயக்குனர் ராஜவேல் கிருஷ்ணா கூறுகையில்,”இது ஒரு சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் படம்.” எக்ஸ்டிரீம் ” என்றால் உச்சக்கட்டம், தீவிரம், அளவுக்கு அதிகம்னு சொல்லுவோம்.
எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு. ஆனால் அதை மீறும்போது நடக்குற விளைவு தான் இந்த படத்தின் கதை. மனிதன் என்ப தே சுய கட்டுப்பாட்டோடு இருப்பதுதான். அதை மீறும்போது தான் மிருகமாக மாறி விடுகிறோம்.
சுய கட்டுப்பாட்டோட இருக்கிறவங்களையும், சில பெண்கள் சுதந்திரம் என்ற பெயரில் பன்னுகிற சில சம்பவங்களால் பாதிக்கப்படுவதும் ஒரு பெண்தான், அதற்கு தீர்வு சொல்லுவதும் ஒரு பெண்தான் என்பதை மையமாக வைத்து இப்படத்தின் திரைக்கதையை அமைத்திருக்கிறோம்.
இந்த கருத்து பெண்களுக்கு எதிரானதாக இருப்பதாக கூறி நிறைய பேர் நடிக்க மறுத்து விட்டனர்.ஆனால் பெண் குழந்தைகளை பெற்ற எல்லா பெற்றோர்களும் கண்டிப்பா இதை ஏற்றுக்கொள்வார்கள்.அப்படியொரு முக்கியமான கருத்தை அனைவருக்கும் இப்படத்தின் மூலம் சொல்லவிருக்கிறோம் என்கிறார்