இயக்குனர் யார் கண்ணன் அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய திரு.சிவகணேசன் மற்றும் ஹரிகுமார் ராஜன், ராஜேஸ்வரி பாக்யராஜ் ஆகியோர் இணைந்து கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்கியுள்ளனர்.
முக்கிய கதாபாத்திரத்தில் பாக்யராஜ், சிவசுப்ரமணிய தீபக், ரஷீத், பிலிப்போஸ், நந்தாகிஷோர், சாஜி, “தொட்றா குமார்” ஆகியோர் நடித்துள்ளனர்.
“டார்க் ஹால் விஷூவல் ட்ரீட்” மற்றும் “லியோ ஜெயிண்ட் மூவிஸ்” ஆகிய நிறுவனங்களின் சார்பாக திருமதி.க.ரத்தினம் மற்றும் அன்சல்னா ஆசாத் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
இத்திரைப்படம் மார்ச் 1முதல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.