தமிழ்நாடு கேரளாவை உலுக்கிய உண்மைச் சம்பவம் – அய்யய்யோ!
சமீபத்தில் தமிழ்நாடு கேரளாவை உலுக்கிய உண்மைச் சம்பவம் ஒன்று ஒட்டுமொத்த மனித சமுதாயத்தையே நடுநடுங்க வைத்து பெரும் பீதிக்குள்ளாக்கியது.இந்த கொடிய சம்பவத்தை மையமாகக் கொண்டு தமிழில் இதுவரை வெளிவராத புதிய வகை த்ரில்லர் காமெடி திரைப்படமாக அய்யய்யோ தயாராகியுள்ளது.இயக்குனர் யார் கண்ணன் அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய திரு.சிவகணேசன் மற்றும் ஹரிகுமார் ராஜன், ராஜேஸ்வரி பாக்யராஜ் ஆகியோர் இணைந்து கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்கியுள்ளனர்.
முக்கிய கதாபாத்திரத்தில் பாக்யராஜ், சிவசுப்ரமணிய தீபக், ரஷீத், பிலிப்போஸ், நந்தாகிஷோர், சாஜி, “தொட்றா குமார்” ஆகியோர் நடித்துள்ளனர்.
Related Posts
“டார்க் ஹால் விஷூவல் ட்ரீட்” மற்றும் “லியோ ஜெயிண்ட் மூவிஸ்” ஆகிய நிறுவனங்களின் சார்பாக திருமதி.க.ரத்தினம் மற்றும் அன்சல்னா ஆசாத் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
இத்திரைப்படம் மார்ச் 1முதல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.