இப்படத்தை எழுதி இயக்கியுள்ள அறிமுக இயக்குநர் மணி மூர்த்தி கூறியதாவது,””90களில் நான் படித்துக் கொண்டிருக்கும் போது எங்கள் பகுதியில் ஒரு சம்பவம் நடந்தது. அதாவது காரைக்காலுக்கும் அக்கரை வட்டம் என்ற பகுதிக்கும் இடையில் ஒரு குறுக்குப் பாலம் உண்டு. அதில் போக்குவரத்து குறைவாக இருக்கும்.தனியே செல்வதற்கு அச்சமூட்டும்.சுற்றுப்புறம் எல்லாம் விவசாய நிலங்கள்.அந்த மரப்பாலத்தினருகே ஒரு பெண் சடலம் கிடந்தது. அடையாளம் தெரியாது சேதமடைந்த நிலையில் அந்தப் பெண் சடலம் கிடந்தது. அது பற்றி போலீஸ் எவ்வளவோ விசாரித்த போதும் சரியாகத் துப்பு கிடைக்காமல் அவர்களுக்கு மிகவும் சவாலாக இருந்தது.
ஆனால் அந்தச் சம்பவம் ஏனோ எனக்கு அப்போது நினைவுக்கு வந்தது. மனதில் பொறி தட்டி வெளிச்சம் கிடைத்தது போல் இருந்தது. உடனே அது பற்றி நாங்கள் யோசித்தோம். அதை விரிவாக்கி திரைப்படமாக எடுப்பதாக முடிவு செய்தோம். அதுதான் இந்த ‘லாரா ‘ திரைப்படம்.திட்டமிட்டபடி படத்தையும் எடுத்து முடித்து விட்டோம்.இப்படத்தின் டைட்டில் லுக்கை, என் பிறந்த நாளில் நடிகர் சத்யராஜ் வெளியிட்டது, எனக்கு ஓர் இன்ப அதிர்ச்சி “.என்கிறார். இப்படத்தின் ஒளிப்பதிவை ஆர்.ஜே.ரவீன் கவனிக்க, ரகு சரவண் குமார் இசையமைத்துள்ளார்.