நடிகர் சூர்யா தனது வாழ்த்துக் குறிப்பில், ” தங்கலானின் வெற்றி மிகப்பெரியதாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
நடிகர் ஆர்யா, ” இயக்குநர் பா. ரஞ்சித், சியான் விக்ரம் மற்றும் தங்கலான் படக்குழுவினர் அனைவருக்கும் இந்தப் படம் மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, ” மண் சார்ந்த கதைகள் சினிமாவாகும் போதுதான் உலக அரங்குகளில் நம் மண்பெருமையும், வாழ்வியலும் பதிவாகும். சிறந்த திறன் மிகு கலைஞர்கள் உலகம் முழுக்க பயணிக்க ஏதுவாக அமையும். அவ்வாறாக மண்சார்ந்து இழப்பைச் சந்தித்த நிகழ்வுகளைத் தாங்கி வரும் படம் தங்கலான். சிறந்த படைப்புகள் தங்களைத் தாங்களே மக்களிடம் சென்று சேர்ந்துவிடும். மக்களின் வாழ்வியலை பெருவலியோடு சொல்லிவரும் இயக்குநர் ரஞ்சித்திற்கு வாழ்த்துகள்.