ஆஸ்கார் விருதை குறி வைக்கும் தங்கலான்! திரையுலக பிரபலங்கள் வாழ்த்து!!

: நடிகர் விக்ரம், பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் தங்கலான். இப்படம் நாளை வெளியாக உள்ள து இந்நிலையில் இப்படத்தினை ஆஸ்காருக்கு அனுப்ப படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது இதையடுத்து இப்படம் வெற்றிடைய திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் சூர்யா தனது வாழ்த்துக் குறிப்பில், ” தங்கலானின் வெற்றி மிகப்பெரியதாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

நடிகர் தனுஷ் , ” எனக்குத் தெரிந்த நடிகர்களில் நடிப்பிற்காக தன்னை முழுவதுமாக அற்பணித்துக் கொண்டு கடின உழைப்பைச் செலுத்தும் நடிகர்களில் ஒருவரான விக்ரம் சாருக்கு வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்..

Dhanush at the Filmfare Awards South 2017 Press Meet

நடிகர் ஆர்யா, ” இயக்குநர் பா. ரஞ்சித், சியான் விக்ரம் மற்றும் தங்கலான் படக்குழுவினர் அனைவருக்கும் இந்தப் படம் மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, ” மண் சார்ந்த கதைகள் சினிமாவாகும் போதுதான் உலக அரங்குகளில் நம் மண்பெருமையும், வாழ்வியலும் பதிவாகும். சிறந்த திறன் மிகு கலைஞர்கள் உலகம் முழுக்க பயணிக்க ஏதுவாக அமையும். அவ்வாறாக மண்சார்ந்து இழப்பைச் சந்தித்த நிகழ்வுகளைத் தாங்கி வரும் படம் தங்கலான். சிறந்த படைப்புகள் தங்களைத் தாங்களே மக்களிடம் சென்று சேர்ந்துவிடும். மக்களின் வாழ்வியலை பெருவலியோடு சொல்லிவரும் இயக்குநர் ரஞ்சித்திற்கு வாழ்த்துகள்.