வெற்றி, சாக்ஷி அகர்வால் நடிப்பில் உருவான ‘அதர்மக் கதைகள்’ !


‘பிக் பேங்’ மூவீஸ் பட நிறுவனம்சார்பில் காமராஜ் வேல் தயாரித்து இயக்கியுள்ள புதிய படத்துக்கு  ‘அதர்மக் கதைகள்’ என  பெயரிடப்பட்டுள்ளது . பழிவாங்குவதை மையமாக கொண்ட ஆந்தாலஜி  வகை படமாக உருவாகியுள்ள இப்படத்தில்  வெற்றி, சாக்ஷி அகர்வால், அம்மு அபிராமி, திவ்யா துரைசாமி, பூ ராமு, சுனில் ரெட்டி உள்பட  பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஏ.ஆர்.ரெஹானா,எஸ் என்  அருணகிரி,ஹரிஷ் அர்ஜுன்,சரண் குமார்என 4 இசையமைப்பாளர்களும்,கே. கே, எம்.எஸ்..பரணி, ராஜிவ் ராஜேந்திரன், ஜெபின் ரெஜினால்ட்
என 4 ஒளிப்பதிவாளர்களும் , நாகூரான் ராமச்சந்திரன், சதிஷ் குரசோவா, மகேந்திரன் கணேசன், ஈ கோபாலகிருஷ்ணன் என 4 எடிட்டர்களும் பணியாற்றியுள்ளனர் .’வின்’  வீரா,  ‘பயர்’   கார்த்திக் இருவரும் சண்டை பயிற்சி அமைத்துள்ளனர்.இதன் படப்பிடிப்பு சென்னையை சுற்றியுள்ள பகுதிகளான பெசன்ட் நகர், ஒட்டக பாளையம் நெசப்பாக்கம் ஆகிய இடங்களில்  நடந்து முடிந்துள்ளது. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின்  பர்ஸ்ட் லுக் போஸ்டரை சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.