சமீபத்தில் வெளியான விக்ரமின் தங்க லான் விமர்சன ரீதியாக வரவேற்க பட்டாலும்,அப்படத்தில் புத்த மதத்தை உயர்வாகக் காட்ட, வைணவ மதத்தை இழிவு படுத்தும் விதமாக காட்சிகள் இருப்பதாகவும், சர்ச்சைக்குரிய காட்சிகளை படத்தில் இருந்து நீக்க வேண்டும் எனவும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பூந்தமல்லி நீதிமன்ற வழக்கறிஞர் பொற்கொடி என்பவர் இயக்குநர் பா. ரஞ்சித் மீது புகார் அளித்துள்ளார்.இந்நிலையில்,இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள புதிய படத்தின் பூஜை சென்னையில் நடந்தது. ‘ஜெர்மன்’ என பெயரிடப்பட்டுள்ள இப் படத்தினை ‘தங்கலான்’ தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்நிகழ்வில் பாடலாசிரியர் மதன் கார்க்கி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளார். இப்படத்தின் போஸ்டரில், போர் விமானத்தில் இருந்து, பாராசூட் மூலம் ஒருவர் குதிக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது.