மலையாள திரையுலகில் பாலியல் ரீதியிலான சீண்டல்கள் தலைவிரித்தாடுவதாக ‘ஹேமா கமிஷன்’ அறிக்கை வெளியிட் டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 233 பக்கங்கள் கொண்ட அறிக்கை, மலையாளத் திரையுலகில் பெரும் அதிர்ச்சியையம் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், “ஒட்டு மொத்த மலையாள சினிமாவையும் குறை கூறக்கூடாது” என முன்னணி நடிகர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.இவ்விவகாரம் குறித்து நடிகை பார்வதி திருவோத்து, தனது கருத்தை பதிவு செய்துள்ளார். அதில், ஹேமா கமிஷன் அறிக்கையை வைத்து, சினிமாத்துறையில் உள்ள அனைத்து பெண்களும் அட்ஜஸ்ட்மென்ட் செய்தவர்கள் என்பது போல பொத்தம் பொதுவாக பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஹேமா கமிட்டியின் அறிக்கையை வெளியே கொண்டுவரவே பல ஆண்டுகளாக போராடியதாகவும், ஆனால் அந்த அறிக்கையில் உள்ள சர்ச்சையான கருத்து குறித்து பேசுவது சரியாக இருக்காது. அறிக்கையின் அடிப்படையில் கேரள சினிமாத்துறையில் என்னென்ன மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்பதை பற்றி பேச வேண்டிய நேரம் என்கிறார்.நடிகை பார்வதியை தொடர்ந்து,முன்னணி நடிகரான டொவினோ தாமஸூம், ஹேமா அறிக்கையில், ஒட்டுமொத்த கேரள திரையுலகையும் குற்றம் சாட்டுவதைப் போல இருப்பதை ஏற்க முடியாது என்றும், மலையாள திரையுலகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் இது போன்ற பிரச்னைகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.