இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68வது பொது குழு கூட்டம் அதன் தலைவர் நடிகர் நாசர் தலைமையில் இன்று காலை 10.30 மணி அளவில் சென்னை, தேனாம் பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் தொடங்கியது . இப்பொதுக்குழுவில் கலந்து கொள்ள சங்கத்தின் பொது செயலாளரும் நடிகருமான விஷால், தனது வீட்டிலிருந்து சைக்கிளிலேயே வந்தார். பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர்கள் கருணாஸ், பூச்சி முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் லதாசேதுபதி, சோனியா, பசுபதி, ராஜேஷ், கோவைசரளா, காளிமுத்து, ஹேமச்சந்திரன் , சரவணன், அஜய் ரத்தினம், ரத்னாப்பா, வாசுதேவன், ஸ்ரீமன், நியமன செயற்குழு உறுப்பினர் சிங்காரவேல், ஆனந்த், லலிதா குமாரி, முத்துகிருஷ்ணன், கலியுல்லாஹ், அனந்த நாராயணன், ஆனந்த் , காளிமுத்து, அடைக்கல ராஜா, முத்துகிருஷ்ணன், பிஎல் காந்தி, அறங்காவலர் குழு உறுப்பினர் சச்சு என்கின்ற சரஸ்வதி, மற்றும் மன்சூர் அலிகான், லொள்ளு சபா மாறன், சார்லி, பெசன்ட் நகர் ரவி , சுவாமிநாதன், ரோகினி, சுரேஷ் சக்கரவர்த்தி, கிங்ஸ்லி, சுனில் ரெட்டி, ரித்விகா, பவன், விச்சு ஜார்ஜ் மரியம், முல்லை கோதண்டம், கிங் காங் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, காலை 8 மணி முதலே சென்னை மற்றும் பல ஊர்களிலிருந்து நடிகர் நடிகைகள், நாடக நடிகர்கள் வரத் தொடங்கினர். வந்திருந்தவர்களுக்கு காலை 8 மணி முதல் ‘இலவச மருத்துவ பரிசோதனை, இலவச கண் பரிசோதனை’ நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் நடிகர் டெல்லி கணேஷ், சி.ஆர். விஜயகுமாரி இருவருக்கும் கலையுலக வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.