ஜீவா, பிரியா பவானி சங்கர், விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை பாலசுப்பிரமணி இயக்கியுள்ளார். சாம் சிஎஸ் இசையமைப்பில், கோகுல் பினாய் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது . நடிகர் ஜீவாவுக்கு இந்த படம் அவருடைய திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்துமா என்பதை இப்படத்தின் வெளியீட்டுக்கு பின்பே தெரிய வரும்