திகில் படமாக உருவான “பிளாக்”!

ஜீவா,பிரியா பவானி சங்கர் நடித்த “பிளாக்” என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில்,தற்போது  இந்த படத்தின் டிரைலர்  வெளியாகி  இணையத்தில் வைரலாகி வருகிறது. கணவன்-மனைவியான ஜீவா மற்றும் பிரியா பவானி சங்கர் ஒரு வில்லாவில் தங்குகின்றனர்   அமானுஷ்யம் நிறைந்த  அந்த வில்லாவில் அவர்கள் சந்திக்கும் திகில் சம்பவங்களே இந்த படத்தின் கதை என்கிறார்கள்.
ஜீவா, பிரியா பவானி சங்கர், விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை பாலசுப்பிரமணி இயக்கியுள்ளார். சாம் சிஎஸ் இசையமைப்பில்,  கோகுல் பினாய் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் வெளியீட்டு   தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது  . நடிகர் ஜீவாவுக்கு இந்த படம் அவருடைய திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்துமா என்பதை இப்படத்தின் வெளியீட்டுக்கு பின்பே தெரிய வரும்