‘கங்குவா’ படத்தின் 2 வது டிரைலர் !
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான ‘கங்குவா’ படத்தின் டிரைலர் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகி, 33 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை பெற்ற நிலையில், இப் படத்தின் மற்றுமொரு டிரைலரை வெளியிட படக்குழு முடிவு செய்து அதற்கான பணியும் நடந்து வருகிறது. அதேபோல், இந்த படத்தின் செகண்ட் சிங்கிள் பாடல் விரைவில் வெளியிடப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.இப் படத்தில் சூர்யா, முதலையுடன் சண்டையிடும் காட்சிக்காக விஎஃப்எக்ஸ் செலவு மட்டும் ஒரு கோடி என்கிறார்கள். இப்படம் வரும் நவம்பர் 14ஆம் தேதி .தமிழ் உள்பட 10 மொழிகளில் வெளியாகிறது இதன் இசை வெளியீட்டு விழா நவம்பர் முதல் வாரத்தில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.