வேட்டையன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் !

 நடிகர் ரஜினிகாந்த்நடிப்பில் த செ ஞானவேல் இலாயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம். “வேட்டையன்” ‘லைக்கா புரொடக்ஷன்’ நிறுவனம் தயாரிக்க, அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.இப்படத்தில்அமிதாப்பச்சன்,  பகத் பாசில், துஷாரா விஜயன், ராணா, ரித்திகா சிங், ரக்ஷன், அபிராமி என பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் வரும்  அக்டோபர் 10 ம் தேதி வெளியாகஉள்ள நிலையில்,  இந்த படத்தின் புரமோஷன் வேலைகள் மும்முரமாக நடந்து  வருகிறது .

இந்நிலையில், “வேட்டையன்” படத்தின் தணிக்கை பணிகள் தற்போது  முடிவடைந்ததாகவும், இந்த படத்தை பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள்   ‘யு/ஏ’ சான்றிதழ் அளித்ததாகவும்,இந்த படத்தின் ரன்னிங் டைம் 167 நிமிடங்கள், அதாவது 2 மணி நேரம் 47 நிமிடங்கள் எனவும் கூறப்படுகிறது.  இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் வெளியாகும் என்று கூறப்படுகிறது.