‘அருண் விசுவலைஸ்’ பட நிறுவனம் சார்பில், வி.எம்.ஆட் .ரமேஷ், ஆர்.அருண் இருவரும் இணைந்து தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளில் தயாரிக்கும் புதிய படத்திற்கு ” ஸ்வீட்டி நாட்டி கிரேஸி” என பெயரிட்டுள்ளனர்.இப்படத்தில்,தெலுங்கில் 10 க்கும் மேற்பட்ட படங்களில் நாயகனாக நடித்ததோடு தமிழில் தங்கமகன், டெவில், கடாவர் போன்ற படங்களில் நடித்த த்ரிகுண் கதாநாயகனாக நடிக்கிறார்.ஸ்ரீ ஜீத்தா கோஷ், இனியா, ராதா ஆகிய மூவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர் இவர்களுடன் ரவி மரியா, தம்பி ராமைய்யா, சத்யன், சாம்ஸ்,மதன்பாபு, விஜய் டிவி தனசேகர், வினோத் தெலுங்கு நடிகர் ஆளி, ரகு பாபு ஆகியோர் நடிக்கிறார்கள்.இப்படத்தை ‘உளவுத்துறை’ பட இயக்குனர் ரமேஷ் செல்வனின் உதவியாளர் ஜி. ராஜசேகர் இயக்குகிறார்.இப்படத்தின் ஒளிப்பதிவை சி.விஜய ஸ்ரீ கவனிக்க,அருணகிரி இசையமைக்கிறார்.இப்படம் குறித்துஅதன் இயக்குனர் ஜி. ராஜசேகர் கூறுகையில், ” மூன்று கோணங்களில்,மூன்று வெவ்வேறு விதமான காதலை மையமாக வைத்து, முழுக்க முழுக்க காமெடி கலாட்டாவாக இப்படம்.உருவாகியுள்ளது
இன்றைய இளைய தலைமுறையினருக்கு ஏற்ற டிரெண்டிங்கான படமாக இது இருக்கும். படம் பார்க்க வரும் அனைவரும் தொடக்கம் முதல் இறுதிவரை சிரித்து மகிழ வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அப்படியான காமெடி சரவெடியான திரைக்கதை இது.ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் இதன் படப்பிடிப்பை,ஐதராபாத்,கோவை, கோத்தகிரி போன்ற இடங்களில் நடத்தி முடித்துள்ள நிலையில்,தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது என்கிறார்.