ஜோதிகா, ஊர்வசி, சரண்யா பொன்வண்ணன்னு பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதை.
பானு ப்ரியாவை நடிக்க வைக்கலாம்னு தேடினா வெளிநாடு போயிருந்தாங்க. அவங்க வர்ற வரை காத்திருந்தோம். அதே மாதிரி ஊர்வசி ஒரு தகவல் களஞ்சியம். அவ்வளவு விஷயங்கள் தெரிஞ்சு வச்சிருக்காங்க.
என்னோட குறும்படங்கள்ல இருந்து கூடவே இருக்கும் எஸ்.மணிகண்டன், ‘குற்றம் கடிதலு’க்கு அடுத்து இதற்கும் ஒளிப்பதிவு பண்ணியிருக்கார். இடையே தெலுங்கில் ரெண்டு படங்கள் அவர் பண்ணிட்டார். படத்துக்கு இசை ஜிப்ரான். இதுல ஜோதிகா, பிரபாவதி என்கிற கேரக்டர்ல ஆவணப்பட இயக்குநரா நடிச்சிருக்காங்க
ஜோதிகா பஞ்சாபி பெண். ஆனா, தமிழை உணர்ந்து பேசி நடிக்கறாங்க. தங்லீஷ்லதான் ஸ்கிரிப்ட் கொடுத்திருந்தேன். டயலாக்கைக் கூட முதல்நாளே வாங்கிட்டுபோய் மறுநாள் வரும்போது மனப்பாடமா பேசினாங்க. ‘மாயாவி’ல சொந்தக்குரல்ல டப்பிங் பேசியிருப்பாங்க. அதுக்குப் பிறகு இதுலதான் அவங்களே டப்பிங் பேசியிருக்காங்க. என்கிறார் இயக்குனர் பிரம்மா.