ஹாலிவுட்டுக்கு இணையான சண்டை காட்சிகளில், மிகவும் ரிஸ்க் எடுத்து தத்ரூபமாக சண்டை போட்டுள்ளார் வளர்ந்து வரும் ஆக்ஷன் ஹீரோ தக்ஷன் விஜய்!அசோக், தக்ஷன் விஜய், சாந்தினி, அப்புகுட்டி, இமான் அண்ணாச்சி, சத்தியம் டிவி முக்தார், கூல் சுரேஷ், ஸ்ரீதர், ஜீவா, தீபா, மதிச்சியம் பாலா, ஹலோ கந்தசாமி, நமோ நாராயணன், சத்யா ஆகியோர் நடித்துள்ளனர். என்.பி.இஸ்மாயில் இயக்கி உள்ளார். ஏ.ஆர்.ரகுமான் சகோதரி ஏ.ஆர்.ரெஹனா இசையமைக்கிறார். ஒளிப்பதிவு கே.கே.சாதிக், . சென்னை , கேரளா ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தி, பிரமாண்டமாக தயாரிக்கிறார் சி.பியூலா மகிழ். படப்பிடிப்பு நிறைவுப் பெற்று, இறுதிக்கட்ட பணிகள் நடைப்பெற்று வருகிறது!
“ஐ அம் வெயிட்டிங்” என ரசிகர்கள் எதிர்பார்க்க, விரைவில் திரைக்கு வருகிறது!