தனுஷின் நடிப்பில், வரும் 20 ஆம் தேதி வெளியாக உள்ள புதிய படம், ‘குபேரா’. இப்படத்தை சேகர் கம்முலா இயக்கியுள்ளார் இதில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். மேலும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நாகார்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.பிச்சைக்காரனாக இருக்கும் தேவாவை நாகார்ஜுனா கதாபாத்திரம் எப்படி குபேராக சீவி சிங்காரித்து கோட் சூட் மாட்டிவிட்டு உட்கார வைக்கிறது என்றும் எதற்காக அவர் அப்படி செய்கிறார்? என்பதும் தான் குபேரா படத்தின் கதை. இப்படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடந்தது.இந்நிகழ்வில் கலந்து கொண்ட நடிகர் தனுஷ் பேசுகையில்,”சினிமாவில் தற்போது பலரும் பாக்ஸ் ஆபீஸ் நம்பர்ஸ்கள் பின்னாடி ஓடிக் கொண்டிருக்கும் போது, சேகர் கம்முலா சார் பட்டாம்பூச்சிகளின் பின்னாடி ஓடிக் கொண்டிருந்தார். தனக்கு தேவையான விஷயம் வரும் வரை ஸ்டபர்னாக இருந்து இந்த படத்தை முடித்தார். நல்ல விஷயத்துக்காக அது இருக்கவே வேண்டும் . ராஷ்மிகா மந்தனாவுக்கு சமீப காலமாக 1000 கோடி ஹீரோயின், 2000 கோடி ஹீரோயின் என்கிற டேக் ஒட்டப்பட்டுள்ளது. அதையெல்லாம் மறந்துடுங்க, ஒவ்வொரு படத்துக்கும் குபேரா படத்தில் போட்டதை போல கடும் உழைப்பை போட்டு நடிங்க, அதுதான் நமக்கு ரொம்பவே முக்கியம், இந்த வசூல் அதிர்ஷ்டம் எல்லாம் தானாகவே உங்களை தேடி வரும் என தனுஷ் பேசியதும் ரஷ்மிகா நெகிழ்ச்சியுடன் கண்கலங்கினார்.மேலும் தொடர்ந்து தனுஷ் பேசுகையில்,”இந்த படத்தில், நான், ராஷ்மிகா, நாகார்ஜுனா சார் எல்லாம் பட்ட கஷ்டத்தை விட இயக்குநர் சேகர் கம்முலா, தோட்டா தரணி சார், ஸ்ரீதேவி பிரசாத், உதவி இயக்குநர்கள் எல்லாம் பட்டக் கஷ்டத்தை நினைத்தால், நானெல்லாம் கஷ்டப்பட்டேன் என சொல்வதற்கே கூச்சமா இருக்கு என்றார் தனுஷ். குபேரா படத்தில் நடித்த பல நடிகர்களை நானே இங்கே தான் டிரைலரில் பார்த்து ஆச்சர்யமடைகிறேன். 3 வருடங்கள் இந்த படம் எடுக்கப்பட்ட நிலையில், படக்குழுவின் ஒட்டுமொத்த உழைப்பும் ஜூன் 20ம் தேதி திரையில் தெரியும்” இவ்வாறு அவர் பேசினார்