நடிகர் பிரபாஸின் திகில் நகைச்சுவை படமான ‘தி ராஜா சாப்’ படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.இந்த டீசர் பழமையான புராணக் கதைகள், திகில் மற்றும் மர்மங்களை நேர்த்தியாக இணைத்து, கிராண்டியர் முறையில் உருவாக்கப்பட்டுள்ளது.இப்படத்தில், சஞ்சய் தத், நிதி அகர்வால், மாளவிகா மோகனன், ரித்தி குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . இந்த டீசரில் டீசரில் பிரபாஸ் இரண்டு மாறுபட்ட தோற்றங்களில் காணப்படுகிறார். இப்படத்தின் டீசர் வெளியீட்டு ஐதராபாத்தில் நடந்தது இந்நிகழ்வில் பங்கேற்ற இப்படத்தின் இயக்குநர் மாருதி கூறியதாவது,“தி ராஜாசாப்’ என்பது வழக்கமான ஜானரை மீறிய ஒரு தனித்த பயணம். ஹாரர், ஃபான்டஸி, உண்மை, மாயை—இவை அனைத்தையும் இணைக்கும் இந்தப் பயணத்தில், நெஞ்சை பதைக்கும் உணர்வுகளும் உள்ளன. பிரபாஸின் சொந்த ஊரில் இந்த டீசரை வெளியிடுவதே, ஒரு மறக்க முடியாத அனுபவம்.. பீப்பிள் மீடியா பேக்டரி தயாரித்துள்ள இந்த பான் இந்தியத் திரைப்படம் வரும் டிசம்பர் 5 அன்று, தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் வெளியாகவுள்ளது — இது மாயாஜாலம் கலந்த மர்ம உலகுக்குள் ரசிகர்களை அழைத்துச் செல்லும் ஒரு பான் இந்திய சினிமா அனுபவமாக அமையும்” என்கிறார்