சமீபத்தில் நான் கலந்து கொண்ட படத்தின் பூஜையில் நான் அணிந்திருந்த ஆடைகளில் நான் வேறு மாதிரியான அதாவது தவறான கோணத்தில் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டதைப் பார்த்து நானே அதிர்ந்து போனேன். நான் இப்படி எல்லாம் போஸ் கொடுத்தேனா என்று எனக்கே சந்தேகம் வந்துவிட்டது. அப்புறம் தான் தெரிந்தது அது நான் கொடுத்த போஸ் இல்லை என்று. இதையெல்லாம் பார்க்கும்போது எரிச்சலாகத்தான் இருக்கிறது. இது எங்கே போய் முடியும்னு தெரியல.இது சங்கடத்தைத் தான் கொடுக்கிறது. தொடர்ந்து இந்த பயம் பல வழிகளில் இருந்தது. தற்போது, ஏ.ஐ.ஆக மாறி நிற்கிறது. மத்திய அரசு இதற்கு கடுமையான சட்டம் இயற்றி இதற்கு முடிவு கட்ட வேண்டும்.ஒவ்வொரு முறையும் சமூக வலைதளப் பக்கங்களில் வர்ற விஷயங்களுக்கும் பயம் வரும். இன்னைக்கு ஏ.ஐ மேல பயம் வந்திருக்கு. நானும் சமந்தாவும் இருக்கும் புகைப்படத்தை பார்த்தேன், நிஜமாலுமே நாங்கள் இருவரும் போஸ் கொடுத்து நிற்பதைப் போல அது இருக்கிறது.
எது உண்மை எது ஏ.ஐ. என்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. எனது கணவருக்கு ஷேர் செய்தால், அவர் உடனே சொல்லுவார், பார்த்தாலே தெரியவில்லையா இது ஏ.ஐ என்று எனக் கூறுவார். அதன் பின்னர் கமெண்ட் செக்ஷனைப் பார்த்தால் அதில் ஏ.ஐ. என்று குறிப்பிட்டு இருப்பார்கள்.எதை நம்புவது, எதை நம்ப வேண்டாம் என்று புரியவில்லை. இதனாலேயே இன்ஸ்டாகிராம் பக்கம் சென்று நான் பார்ப்பதில்லை. ஒரு மாதிரி விரக்தியாக தான் இருக்கிறது. மோசமாக கமெண்ட் செய்தவர்களைப் பார்த்து சொல்ல விரும்புவது ஒன்றுதான், வாழுங்கள், எங்களையும் வாழவிடுங்கள் என்றுதான் சொல்ல விரும்புகிறேன் ” இவ்வாறு அவர் கூறினார்