நடிகைகளை அச்சுறுத்தும் ‘ஏ ஐ’: கீர்த்தி சுரேஷ் பரபரப்பு பேட்டி!!

இயக்குநர் சந்துரு இயக்கத்தில் ‘ரிவால்வர் ரீட்டா’ என்ற திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இந்த படம் வரும் 28-ந்தேதி தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட நடிகை  கீர்த்தி சுரேஷ் நிருபர்கலின் கேள்விகளுக்கு பதிலளித்து கூறியுள்ளதாவது, , “பொதுவாகவே நமது நாட்டில் பெண்களுக்கான பாதுகாப்பு குறைவாகத்தான் உள்ளது. துபாய், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருப்பதுபோல் நமது நாட்டில் இல்லை.துபாய் உள்ளிட்ட நாடுகளில் பெண்களின் பாதுகாப்பிற்காக கடுமையான சட்டதிட்டங்கள் இருக்கின்றன. ஆனால் நமது நாட்டில் பெண்கள் பாதுகாப்பு விஷயத்தில் குறைபாடு குறைபாடு இருக்கிறது. அது நிச்சயம் மாற வேண்டும். நடிகைகளை அச்சுறுத்தும் ஏ ஐ தொழில் நுட்பம்  குறித்துகேட்கிறார்கள் . இப்போ பெரிய பிரச்னை ஏ.ஐதான். அது நமக்கு வரமாகவும் இருக்கும். சில சமயங்களில் அழிவை உண்டாக்கும் விஷயமாகவும் இருக்கு.ஏ ஐ  தொழில்நுட்பம் என்பது நாம் கண்டுபிடித்ததுதான். அது இன்றைக்கு நம்மைக் கடந்து சென்று கொண்டுள்ளது. சமூக வலைதளங்களில் நான் பார்க்கும்போது, நான் இது போன்ற டிரஸ் போட்டேனா என்று நானே ஆச்சரியப்பட்டு பார்த்திருக்கிறேன். ஏ.ஐ. ஆல் உருவாக்கப்படும் புகைப்படங்களும் வீடியோக்களும் அவ்வளவு தத்ரூபமாக இருக்கிறது.

சமீபத்தில்  நான் கலந்து கொண்ட படத்தின் பூஜையில் நான் அணிந்திருந்த ஆடைகளில் நான் வேறு மாதிரியான அதாவது தவறான கோணத்தில் புகைப்படங்கள் இணையத்தில்  பகிரப்பட்டதைப் பார்த்து நானே அதிர்ந்து போனேன். நான் இப்படி எல்லாம் போஸ் கொடுத்தேனா என்று எனக்கே  சந்தேகம் வந்துவிட்டது. அப்புறம் தான் தெரிந்தது  அது நான் கொடுத்த போஸ் இல்லை என்று. இதையெல்லாம் பார்க்கும்போது எரிச்சலாகத்தான் இருக்கிறது. இது எங்கே போய் முடியும்னு தெரியல.இது சங்கடத்தைத் தான் கொடுக்கிறது. தொடர்ந்து இந்த பயம் பல வழிகளில் இருந்தது. தற்போது, ஏ.ஐ.ஆக மாறி நிற்கிறது. மத்திய அரசு இதற்கு கடுமையான சட்டம் இயற்றி இதற்கு முடிவு கட்ட வேண்டும்.ஒவ்வொரு முறையும் சமூக வலைதளப் பக்கங்களில் வர்ற விஷயங்களுக்கும் பயம் வரும். இன்னைக்கு ஏ.ஐ மேல பயம் வந்திருக்கு. நானும் சமந்தாவும் இருக்கும் புகைப்படத்தை பார்த்தேன், நிஜமாலுமே நாங்கள் இருவரும் போஸ் கொடுத்து நிற்பதைப் போல அது இருக்கிறது.

எது உண்மை எது ஏ.ஐ. என்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. எனது கணவருக்கு ஷேர் செய்தால், அவர் உடனே சொல்லுவார், பார்த்தாலே தெரியவில்லையா இது ஏ.ஐ என்று எனக் கூறுவார். அதன் பின்னர் கமெண்ட் செக்‌ஷனைப் பார்த்தால் அதில் ஏ.ஐ. என்று குறிப்பிட்டு இருப்பார்கள்.எதை நம்புவது, எதை நம்ப வேண்டாம் என்று புரியவில்லை. இதனாலேயே இன்ஸ்டாகிராம் பக்கம் சென்று நான் பார்ப்பதில்லை. ஒரு மாதிரி விரக்தியாக தான் இருக்கிறது. மோசமாக கமெண்ட் செய்தவர்களைப் பார்த்து சொல்ல விரும்புவது ஒன்றுதான், வாழுங்கள், எங்களையும் வாழவிடுங்கள் என்றுதான் சொல்ல விரும்புகிறேன் ” இவ்வாறு அவர் கூறினார்