நடிகை சமந்தா, இயக்குநர் ராஜ் நிடிமோருவை 2 வது திருமணம் செய்து கொண்டு மீண்டும் இல்லற வாழ்க்கைக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில், வரும் 2026 ஆம் ஆண்டை புதிய அதிரடி தீர்மானங்களுடன் வரவேற்க தயாராகிவிட்டதாக தனது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் .அதை வெளிப்படுத்தும் விதமாக, படுக்கையில் படுத்துக்கொண்டு சிரித்தபடி இருக்கும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து தனது தீர்மானங்களை பட்டியலிட்டுள்ளார்.அதில்,”நன்றியுணர்வு, நீண்ட கால ஆரோக்கியத்திற்கான உடற்பயிற்சி, ஆழமான உறவுகள், உள்ளுணர்வுக்குச் செவிசாய்த்தல், நிலையான வேலை, நிலையான வளர்ச்சி மற்றும் நோக்கத்துடன் கூடிய இணைப்பு” ஆகியவை எனது 2026 ஆம் ஆண்டு தீர்மானங்கள் என பதிவிட்டுள்ளார். சமந்தா தற்போது வாழ்க்கையை ஒரு புதிய கண்ணோட்டத்தில் அணுகும் மனநிலையில் உள்ளார்.அதன் வெளிப்பாடுதான் இந்த பதிவு என்கிறார்கள்.வரும் 2026-ஆம் ஆண்டை மெதுவாகவும், தெளிவாகவும், ஒரு நோக்கத்துடனும் பயணிக்கும் ஆண்டாக மாற்ற அவர் விரும்புகிறார் என்பதையே இப்பதிவு காட்டுகிறது.